ஸ்ரீலரெ 4 முழுமையான வசதிகள் கொண்ட பயிற்சி நிலையங்களைக் கொண்டுள்ளது. பிரதான பயிற்சி நிலையங்கள் வெலிசர மற்றும் மொரட்டுவ்விலும், இரு பிராந்திய பயிற்சி நிலையங்கள் பெரதேனியா மற்றும் காலியிலும் அமைந்துள்ளன.
ஆரம்பத்தில் ஸ்ரீலரெ பயிற்சி நிலையங்கள் ஸ்ரீலரெ ஊழியர்களுக்கு மட்டும் பயிற்சிகளை வழங்கிவந்தது. ஆனாலும் பின்னர், பிற தொலைத்தொடர்பு இயக்குனர்கள் உட்பட்ட, வெளியாருக்கும் பயன்பெறும் வண்ணம் தொழில்வல்லுனர்கள் மற்றும் மாணவர்களுக்கும் பயிற்சிகளை வழங்கியது.
ஸ்ரீலரெ பயிற்சி நிலையமானது City & Guilds and Edexcel of UK போன்ற கல்வித்தகைமைகளை வழங்கும் நிறுவனங்களுடன் இணைந்து, சர்வதேசரீதியில் அங்கீகரிக்கப்படும் கற்கைநெறிகளை மாணவர்களுக்கு அளிக்கிறது.
நாம் வழங்கும் சுதந்திரமான, உயர்தனமான பயிற்சிநெறிகள், கருத்தியல் அறிவை மட்டுமன்றி, தேவையான செய்முறைப்பயிற்சிகளால் ததொதொ மூலமான உண்மையான வாழ்க்கை அனுபவத்தையும் வழங்குகின்றன. எனவே, நாம் மாணவர்களிடம் தனிப்பட்டமுறையில் கவனஞ்செலுத்தி, செய்முறைப்பயிற்சிகளுக்கு மேலதிக நேரத்தையும் அளிக்கிறோம். குறைந்த மாணவர்களைக்கொண்ட வகுப்புகள், மாணவர்களுக்கும் விரிவுரையாளர்களுக்குமிடையில் பரந்த இடைவினையை ஏற்படுத்தி, தனிப்பட்ட கவனம் செலுத்தப்படுவதை உறுதிப்படுத்துகிறது.