1973 இல் நிறுவப்பட்ட மொறட்டுவ பயிற்சி நிலையமே ஸ்ரீலரெயின் முதலாவது பயிற்சி நிலையமாகும். பழைய காலி வீதியில் ஹொறதுட்டுவவில் இருக்கும் இப்பயிற்சி நிலையத்துக்கு களுத்துறை, பிலியந்தலை மற்றும் கொழும்பிலிருந்து இலகுவாக செல்லமுடியும்.
மொறட்டுவ பயிற்சி நிலையத்தில் வகுப்பறைகள், ஆய்வுகூடங்கள், கலையரங்கம், நூலகம் மற்றும் நிர்வாக அலுவலகம் உட்பட, தேவையான சகல வசதிகளுமுள்ளன. இங்கே விடுதியுடன், கிரிக்கட், கூடைப்பந்து, பூப்பந்து விளையாட்டுக்களுக்கான மைதானமும், உள்ளக விளையாட்டரங்கமும் உள்ளன. மாணவர்களுக்காக உடற்பயிற்சிக்கூடமும் உண்டு.