1988 இல் ஸ்தாபிக்கப்பட்ட வெலிசர பயிற்சி நிலையமானது, எமது பிரதான பயிற்சி நிலையமாகும். நீர்கொழும்பு வீதியில், வெலிசரவிலுள்ள இந்த பயிற்சி நிலையத்திற்கு கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் கம்பஹாவிலிருந்து இலகுவாகச்செல்லலாம்.
வெலிசர பயிற்சி நிலையத்தில் அமைதியான கல்விச்சூழலுக்கான சகல வசதிகளுமுள்ளன. முழுமையாக குளிரூட்டப்பட்ட ஆய்வுகூடங்கள், வகுப்பறைகள், நூலகம் மற்றும் நிர்வாக அலுவலகங்களுடன் மாணவர்களுக்கான விடுதிகளும் இங்கே உண்டு. ஒரு பெரிய விளையாட்டு மைதானமும் உள்ளக விளையாட்டுக்கூடமும் உள்ளதால், மாணவர்கள் தமது வளாக வாழ்க்கையை சுறுசுறுப்பாக அனுபவிப்பதற்கான எல்லா விளையாட்டு நடவடிக்கைகளிலும் பங்கேற்க ஊக்கப்படுத்தப்படுகிறார்கள்.
தொலைத்தொடர்பாடல், இலத்திரனியல் பொறியியல், எலக்ரோனிக்ஸ், கணிணி விஞ்ஞனம், கட்டட பொறியியல், கணிதம், முகாமைத்துவம் மற்றும் ஆங்கிலம் உட்பட பல்வகையான பாடங்களில் புத்தகங்களும் அதுசம்பந்தமான பொருட்களும் இங்குண்டு.
நூலக வசதிகளாவன, குறிப்பெடுத்தல், இரவல் கொடுத்தல், சஞ்சிகைகள், பத்திரிகைகள் மற்றும் ஒலி ஒளிக்கான பிரிவுகள் போன்ற வசதிகள் இங்குண்டு. அத்துடன் இங்கே புத்தக களஞ்சியத்துடன், அறிக்கைகள், சுற்றறிக்கைகள், கையேடுகள், அரியவகை நூல்கள், மாதாந்த சஞ்சிகைகள், தரவு புத்தகங்கள மற்றும் குறுந்தகடுகள், காணொளிகள் (VHS, VCD, DVD, audio tapes).
நூலகங்கள் கிழமை நாட்களில் காலை 9..00 இலிருந்து மாலை 4.30 வரையும் திறந்திருக்கும்.